Sunday, April 26, 2015

நகைச்சுவை

Thursday, April 23, 2015

Blade hotel

பிளேடு ஹோட்டல்"

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

CUSTOMER : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

CUSTOMER : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

CUSTOMER : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா? 

CUSTOMER : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

CUSTOMER : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

CUSTOMER : அதிகமா.

SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

CUSTOMER : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா? 

CUSTOMER : சிவப்பு.

SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

CUSTOMER : அதிகமா உள்ளது.

SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

CUSTOMER : உரம் போடாதது.

SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா? 

CUSTOMER : கழுவிட்டு போடு.

SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

CUSTOMER : நல்லா வேகணும்.

SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?

CUSTOMER : நெய்.

SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)

SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

SERVER : கேஷ்

CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?

SERVER : நோட்டா தாங்க.

CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?

SERVER : புதியது.

CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?

SERVER : காந்தி படம் போட்டது.

CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?

SERVER : கண்ணாடி போட்டது.

CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

SERVER : சாதா கண்ணாடி.

CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.

CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் இப்படி பன்னுவே.

Saturday, April 18, 2015

Fish going to fry soon


வாழை இலையின் மருத்துவ குணங்கள்இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

Friday, April 17, 2015

எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது…

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது…

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு….

# நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
*************************
படித்ததில் பிடித்தது;
பிடித்ததில் சுட்டது...
      
*************************

Thursday, April 9, 2015

இஸ்ரேல் ஒரு பார்வை


84 நோபல் பரிசுகள் பெற்றhn ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று .

அந்த நாடு தான் இஸ்ரேல்.                   .                                                                         .                                                                          படிப்போம் பகிர்வோம்.                   விழிப்போம் செழிப்போம்.

Sunday, April 5, 2015

கல்லணை ஒரு பார்வை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

கல்யாணம் vs ஜல்லிக்கட்டு


கல்யாணம் - ஜல்லிக்கட்டு, என்ன ஒற்றுமை?

வளர்க்கிறவன் எஸ்கேப் ஆயிடுவான், அடக்க  வருரவனுக்கு தான் உயிர் போகும் !

Take care your child

Saturday, April 4, 2015

Nice pictures

இது நட்பின் நேசம்


* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம். 

சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும்,

அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவிடமும்,

வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என தங்கையிடமும்,

முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று தம்பியிடமும் சொல்லிவிடலாம், 

ஆனால்,

சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்.
இது நட்பின் நேசம்.

நம்மில் பலர் இதை கண்டிப்பாக கடந்திருப்போம்.

உணர்ந்தவர்கள் நேசத்துடன் பகிருங்கள்☺😊😊😊

Friday, April 3, 2015

பிளாஸ்டிக் என்னும் கொடுங்கோலன்பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது
எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்

வருங்கால அப்பாக்கள் மகன்களை எப்படி வசை பாடுவார்கள் ?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

Koli vs kohli


அஞ்சப்பர் ஹோட்டலுக்கு
முன்னாடி போன
கோழியும்,
அனுஷ்கா சர்மாக்கு
பின்னாடி போன கோலியும்,
அவுட் தான்...!!!
அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுக்காமல் விவசாயம் பண்ண சொல்லி கொடுங்க.
ஏனெனில் ஸ்கோர விட சோறு தான் முக்கியம்...
🌾🌾🌱🌱🌱
நன்றி
💰

Thursday, April 2, 2015

பணத்திற்கும், பதவிக்கும் பின்னால் ஓட வேண்டாம்
இதயத்தை தொடுகிறது ...

மற்றுமொரு  காலை  அது.  நான் மீண்டும் அலுவலகம் போக வேண்டும் தான்.
 
ஐயோ செய்தித்தாளில் என் படம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது இரங்கல் குறிப்பை பத்தியில் என்ன செய்யும் ?? விநோதம்.
 
ஒரு நிமிடம்  ... நான் யோசிக்கிறேன் நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் மார்பு கடுமையான வலி இருந்தது ,  , ஆனால் அதன் பிறகு நான் எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
 
காலை இப்போது, என் காபி எங்கே? ஏற்கனவே 10:00 மணி ஆகிவிட்டது ? எனக்கு அலுவலகத்திற்கு தாமதமாகிறது  என் முதலாளி என் மேல்  எரிச்சலில் இருக்க  ஒரு வாய்ப்பு இது . எங்கே எல்லோரும். ??? நான் கதறினேன்.
 
"நான் பார்த்தேன் என் அறைக்கு வெளியே ஒரு கூட்டம்!! " பல மக்கள், ஆனால் ஏன் அழுகின்றனர்?
என்ன நடக்கிறது ??? நான் தரையில் கிடக்கின்றேன் .
 
"நான் இங்கே இருக்கிறேன்". நான் கத்தினேன் !!!  "நான் இறக்கவில்லை" இதோ பார். நான் மீண்டும் கத்தினேன் !!! அவர்கள் அனைவரும் படுக்கையில் என்னை பார்க்கின்றனர்.
 
நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன் .
 
"நான் இறந்துவிட்டேனா ??" நான் என்னையே கேட்டேன்.
 
எங்கே என் மனைவி, என் குழந்தைகள், என் நண்பர்கள், என் அம்மா, அப்பா?
 
அடுத்த அறையில் அவர்கள்  ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருதனர் .
 
என் மனைவி அழுது கொண்டிருந்தாள், உண்மையில் அவள் சோகமாக. என் சிறிய குழந்தை என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவர் அவரது அம்மா வருத்தமாக இருந்ததால் அவனும் அழுதான்.
 
நான் அவனை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று என் குழந்தையிடம் சொல்லாமல்  எப்படி போவது..??? 

இந்த உலகத்தில் உண்மையில் மிகவும் அழகான மற்றும் மிகவும்  பாசமான மனைவி நீதான் என்று என் மனைவி சொல்லாமல் எப்டி போக முடியும் .. ??

நான் எப்படி என் பெற்றோர்களிடம் உங்களால் தான் நான் என்று  சொல்லாமலேயேசெல்வது ??

எப்படி என் நண்பர்களிடம் ஒருவேளை  நீங்கள்  என் வாழ்க்கையில்  இல்லாமல் போனால் நான் தவறான விஷயங்களை செய்திருப்பேன் என்று சொல்லாமல் செல்வது...???

நான் தேவைப்படும் போது எப்போதும் அங்கு இருந்ததற்கு நன்றி. 
 
ஒரு நபர் மூலையில் நின்று கொண்டு இருக்கிறார் , தனது கண்ணீர் மறைக்க முயற்சிக்கிறார். அவர் என் சிறந்த நண்பர், ஆனால் ஒருமுறை ஒரு சிறிய தவறான புரிதல் எங்களை பிரித்து விட்டது , நம்மை துண்டிக்க நாம் இருவரும் வைத்திருந்த  வலுவான ஈகோ வே காரணம்.
 
நான்...  அங்கு சென்று, அவரிடம்  என் கை நீட்டி அன்பான நண்பா, நாம் இன்னும் சிறந்த நண்பர்கள் , என்னை மன்னியுங்கள், நடந்த எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றேன்.... 
 
அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் இன்னும் ஈகோ வில் உள்ளார். நான் மன்னிப்பு கேட்ட பின்பு கூட ஒரு பதிலும் இல்லை. 
 
ஒரு நிமிடம்..  அவரால்  என்னை பார்க்க முடியவில்லை என்று  தெரிகிறது !!!! அவரால் என் நீட்டிக்கப்பட்ட கையை  பார்க்க முடியவில்லை. நான் உண்மையில் இறந்து விட்டேனா  ???
 
நான், என் அருகில் உட்கார்ந்து அழுவது போல உணர்கிறேன்.
 
"ஓ  கடவுளே  !!!! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள் ." நான் என் மனைவி, என் பெற்றோர்கள்என் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்..!! 

என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று  நான் கத்தினேன். அவளால் என் வார்த்தைகளை கேட்க முடியவில்லை. உண்மையில்  இதற்கு முன்னால் இவ்வாறு  அவளிடம் சொல்லவே  இல்லை.
.
"கடவுளே  !!!!" நான் கதறினேன். இன்னும் கொஞ்சம்நேரம் plzzzzzzzzzzzzzz .. நான் அழுதேன்.
 
தயவு செய்து இன்னும் ஒரே  ஒரு வாய்ப்பு... 

என் குழந்தையை  இறுக கட்டி அணைக்க....

என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க...., 

என் அப்பா என்னை பெருமையாய்  நினைக்க வைக்க...

என் நண்பர்களிடம் மனதார மன்னிப்பு கேட்க.... 
 
இப்பொழுது நான் அழுதேன் !!!!
 
நான் கத்தினேன் ...!!!
 
"கடவுளே தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு  தாருங்கள் !!!! 
 
இப்போது மெதுவாக விழித்தேன், என் மனைவி என் அருகாமையில் வந்து  "நீங்கள் உங்கள் தூக்கத்தில் சத்தம் போட்டீர்கள் ," என என் மனைவி கூறினார். "நீங்கள் ஏதும் கனவு கண்டீர்களா ?" என்றாள்..!!! 
 
நான் கண்டது வெறும் கனவு தான் .. ..
 
என் மனைவியால் தற்போது நான் கூறுவதை கேட்க முடிகிறது , இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரமாகும். நான் அவளை கட்டி அணைத்து " இந்த பிரபஞ்சத்திலேயே  நீ மிகவும் அழகான மற்றும் பாசமான  மனைவி,  நான் உண்மையில் உன்னை நேசிக்கிறேன் கண்ணே" என்றேன். 
 
அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரையும் அவளது புன்னகையின் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ..
 
"இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி."
 
நண்பர்களே இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது.... 

நமது ஈகோவை புறம் தள்ளி விட்டு நமது பாசத்தையும் நேசத்தையும் நமக்கு நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது  பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. பின் கிடைக்காமல் போனால் வருத்தபடுவீர்கள்.... 

பணத்திற்கும், பதவிக்கும் பின்னால் ஓட வேண்டாம் ....

மனித வாழ்க்கை ஒரே ஒருமுறை தான், அதுவும் அந்த வாழ்க்கை மிகமிக குறுகியது, இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்யுவோம், சந்தோஷமாய் இருப்போம்....!!! 

(படித்ததில் பாதித்தது.....!!!)

Japanese biker Rider vs Indian Bike Riderபோட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்.... ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி... ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்... முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார், 1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது.., அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது.அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான், பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான். 2 கிமீ ஓடியது. வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான். அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான். ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்.. ஜப்பான் காரன் சொன்னான்,பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான், ஆனால் அதை எப்படிலாம் ஓட்டலாம்'ங்கிரத என்பதை உங்கள்ட்ட இருந்துதான் கத்துக்கணும்.