Tuesday, March 17, 2015

கிரிக்கெட் தெரிந்த செய்தி தெரியாத உண்மைகள்.


கிரிக்கெட்

தெரிந்த செய்தி
தெரியாத உண்மைகள்.

உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டின் அள்ள 
அரசாங்கத்தின் விளையாட்டு துறையின்
சார்பில் வீரர்களை தேர்வு செய்வார்கள். 

இந்தியாவை தவிர

இந்திய கிரிக்கெட் வாரியம்
என்ற தனியார் அமைப்பு தான் இந்திய வீரர்களை தேர்வு செய்யும். 

இதில் இந்திய அரசாங்கத்தின் பிரதமர்
அல்லது குடியரசுத் தலைவர் கூட தலையிட முடியாது.  காரணம் அந்த
தனியார் அமைப்பின் விதி
அப்படி! 

கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்து ம்
அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல. 

மாறாக உலக கோப்பை
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றால் மக்களின்
வரிப்பணத்தில் இருந்து
அரசாங்கம் கோடி கோடியாக வீரர்களுக்கு பரிசாக கொட்டி கொடுப்பார்.

ஒரு அரசாங்க ஊழியர். இன்னொரு அரசு துறை யிலே அல்லது வேறு தனியார் நிறுவனத்திலே பணி செய்ய இயலாது. 

ஆனால் இந்திய கிரிக்கெட்
வீரர் அனைவருக்கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள். மற்றும் பல தனியார் நிறுவனத்தில் 
கௌரவத் தலைவராக இருந்த கொண்டு தனி ஊதியம் பெறுவார்கள். 

இவற்றுக்கு மேலாக
ஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு விளம்பரங்களில் நடித்து
கோடி கோடியாக சம்பாதிப்பார்கள்

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன்
இம்ரான்கான் மற்றும்
அப்ரிடி  அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் கிடைத்த வருவாய்  கொண்டு
அவர் அவர் சொந்த ஊரில்
ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண்டு மருத்துவமனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக
கட்டி உள்ளார்கள்.

முறையான வருமான வரி 
செலுத்துபவர் என்று மார் தட்டி கொள்ளும் தெண்டுல்கரும், உலகின் முதல் நிலை பணக்கார
விளையாட்டு வீரர் தோனி யும்.

இந்திய மக்களுக்கு செய்த
கைமாறு என்ன? 

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்கள்
கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களுக்கு தொலைக்காட்சி யில்
கை தட்டி ரசிப்பது? 

நாங்கள் கை தட்டி ரசிப்பது
உங்களை அல்ல. 
உங்கள் பனியன் மீது
இருக்கும்
எங்கள் தேசத்தின்
பெயருக்காக!!

No comments:

Post a Comment