Tuesday, March 17, 2015

அண்ட்ராய்டு தொலைபேசியை ரூட் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்

அண்ட்ராய்டு தொலைபேசியை ரூட் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்
-----------------------------------------------------

இன்றைய நிலைமையில் தொலைபேசி என்பது அனைவருக்கும் ஒரு அத்தியாவசியப்பொருளாக உள்ளது அதிலும் அண்ட்ராய்டு போன் நமது விருப்பத்தில் முதலாவதாக உள்ளது காரணம் விலை குறைவு , கண்ணை பறிக்கும் வண்ணங்கள் , எண்ணிலன்டங்கா அப்ஸ்மற்றும் நமது விருப்பான கம்பெனியை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம் முன்னணி நிறுவனங்களாகிய சோனி, சாம்சங் , மோட்டோரோலா அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு மொபைல் உலகத்தை மாற்றியது என்று சொல்லால் மிகையாகாது.

ஆனாலும் இதிலும் சில குறைபாடுகள் உள்ளன ஆதாவது விலை குறைவான போன்களை வாங்கும்போது இன்டெர்னல் மெமரி குறைவாகவே இருக்கும் ஆதானால் நமது போன் சற்று மெதுவாகவே வேலை செய்யும். கம்ப்யூட்டர் என்றல் எக்ஸ்டெர்னல் RAM நிறுவி நமது கணினியின் செயல்திறனை அதிக படுத்திக்கொள்ளலாம் அதுபோலவே மொபைல்லில் ரூட் (ROOT) செய்யலாம். சுங்க சொல்லால் கணினியில் எப்படி ஓவர் க்ளோக்கிங்கோ மொபைலில் ரூட்டிங். அப்படி செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
அட்மின் அச்செஸ்.

அதுவரை உங்கள் மொபைல்லில் உள்ள default apps என்று சொல்லப்படும் உங்கள் தொலைபேசி கூட வரும் அப்பிளிகேஷன்களை நீக்க முடியாமல் சிரமப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக கூகிள் மேப்ஸ், கூகிள் பிளஸ் போன்ற அப்பிளிகேஷன்கள் அதிக மெமரியை எடுத்துக்கொள்வதுடன் அவைகளை நீக்கவும் முடியாது. நீங்கள் ரூட் செய்வதன் மூலம் அவைகளை நீக்க முடிவும். அதைப்போலவே எக்ஸ்டெர்னல் மெமரியை சுவப்(SWAP) செய்யலாம்.

கஸ்டம் ரோம் (custom rom)
அடுத்ததாக உங்கள் மொபைலை ரூட் செய்வதன்மூலம் நீங்கள் கஸ்டம் ரோம் இன்ஸ்டால் செய்யாலாம் CyanogenMod, Paranoid Android, MIUI போன்றவை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ரூட் செய்வதால்உங்கள் போனுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ்(os) போடலாம், உங்கள் பேட்டரி பேக்அப்பை அதிகபடுத்தலாம். ரூட் செய்வதால் ஏற்ப்படும் இன்னுமொரு பயன் இனி உங்கள் அலைபேசியில் எந்த ஒரு விளம்பரங்களும் வராது.

No comments:

Post a Comment