"சுவையை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்"
நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. இந்த சுவை நாக்கால் மட்டுமே ஜீரணிக்க முடியும். வயிற்றுக்குச் சுவையை ஜீரணிக்கத் தெரியாது. எனவே ஒரு உணவை வாயில் வைத்தவுடன் அதில் சுவை நிறையாக இருப்பது தெரிகிறது. பிறகு மெல்ல மெல்ல அந்தச்சுவை காணாமல் போய்விடுகிறது. அப்பொழுது நாம் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அந்தச்சுவையைக் கிரகித்து சக்தியாக மாற்றுகின்றன. சுவையை இரசிக்காமல், ருசிக்காமல் ஒரு வேளை விழுங்கினால் அந்த சுவை வயிற்றால் ஜீரணிக்க முடியாது. ஏனென்றால் வயிற்றுக்குச் சுவையை ஜீரணம் செய்யத் தெரியாது. பொருளை மட்டுமே ஜீரணம் செய்யத் தெரியும். நாக்கால் ஜீரணிக்கப்பட முடியாத ஒரு சுவை மலமாக மட்டுமே போகும். எனவே உள்ளச் சுவைகளைச் சத்தியாக மாற்ற வேண்டும் என்றால் ஒரு உணவில் உள்ள அனைத்து சுவைகளையும் இரசித்து, ருசித்து அந்த சுவை சப்பை ஆகும் வரை சுவையற்றுப் போகும்வரை வாயில் வைத்திருக்க வேண்டும். நாம் ஒரு உணவை விழுங்குவதற்கு முன் அதில் சுவை கண்டிப்பாக இருக்கக்கூடாது. இப்படி சுவைத்துச் சாப்பிட்டால், சுவை மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியும், பொருளினால் உருவாகும் பிராண சக்தியும், இரண்டு பிராண சக்தியும் நமக்குக் கிடைக்கும். எனவே உணவைச் சாப்பிடும்பொழுது மென்று சுவைத்து முழுவதும் சுவையற்ற பிறகே விழுங்க வேண்டும். வாழ்வோம் ஆரோக்கியமாக!!
No comments:
Post a Comment