Monday, March 16, 2015

8 மாத கால கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவைகள்

8 மாத கால கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவைகள்!!!



பிரசவ காலம் நெருங்க ஆரம்பிக்கும் போது கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மருத்துவரை அவ்வப்போது சந்தித்து, அவர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் நோய்களின் தாக்கமும், உடலில் பிரச்சனைகளும் விரைவில் வரக்கூடும்.

எனவே கர்ப்பிணிகள் 8 மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் கர்ப்பிணிகள் எந்த ஒரு பிரச்சனையை சந்தித்தாலும், அது வயிற்றில் வளரும் குழந்தையையும் தாக்கும். இது உடல் அளவிலான பிரச்சனையில் மட்டுமின்றி, மன அளவிலான பிரச்சனையினாலும் ஏற்படக்கூடும். இங்கு 8 மாத காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

டயட்

பிரசவ காலம் நெருங்க ஆரம்பிக்கும் போது, நல்ல பிரஷ்ஷான மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். பழைய உணவுகளையும், பாஸ்ட் புட் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் புரோட்டீன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள் நல்லது தான். இருப்பினும் அதனை அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இரைப்பையில் பிரச்சனைகள் வந்து, அதனால் நீங்கள் அவஸ்தைக்குள்ளாவதுடன், வயிற்றில் வளரும் குழந்தையும் அவஸ்தைப்படும். எனவே அளவான காரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீண்ட பயணத்தை தவிர்க்கவும்

8 மாத காலம் ஆகிவிட்டாலே, குழந்தை எந்த நேரம் வேண்டுமானாலும் பிறக்கக்கூடும். எனவே இக்காலத்தில் நீண்ட தூர பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.

நீண்ட நேரம் உட்கார வேண்டாம்

8 மாத காலத்தில் பெண்கள் நீண்ட நேரம் உட்கார்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் முதுகு வலி அதிகரிப்பதுடன், அடிவயிற்றில் அதிகப்படியான அழுத்தத்தைத் தரக்கூடும். இதனால் குழந்தை அசௌகரியத்தை உணரும். எனவே அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்களாக இருந்தால், அவ்வப்போது சிறு நடையை மேற்கொள்ளுங்கள்.

அழுத்தம் வேண்டாம்

மன அளவிலோ அல்லது உடல் அளவிலோ அதிகப்படியான கஷ்டத்தை சந்திப்பதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தையின் மனநிலை தான் பாதிக்கும். எனவே எப்போதும் சந்தோஷமான மனநிலையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். பிடித்ததை செய்யுங்கள். இதனால் குழந்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment