பட்ஜெட் சிறப்பம்சங்கள்...
* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.
* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.
* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.
* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.
* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.
* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக ரூ.165 கோடி ஒதுக்கீடு.
* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.
* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.
* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.
* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.
* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில் முடியும்.
* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.
* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு
* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.
* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.
* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.
* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.
* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.
* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.
* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.
* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.
* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.
* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.
* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.
* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.
* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.
* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.
* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.
* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.
* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.
* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.
* தகவல் தொழ்ல்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.
* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.
* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயன மானியத்திற்கு ரூ.480 கோடி.
* டீசல் மாணியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு
* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி
* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.
* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.
* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.
* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.
* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.
* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.
* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.
* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி
* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.
* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.
* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.
* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி
* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.
* தொழிலாளர் நலத்துறைக்கு மொத்தம் ரூ.139.26 கோடி.
* தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதி உதவிக்காக ரூ.70 கோடி
* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.364.62 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.18,668 கோடி.
* ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை.
* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.250.49 கோடி.
* விடுதி பராமரிப்பு மற்றும் உணவு செலவினங்களுக்கு ரூ.82.69 கோடி.
* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.115.80 கோடி நிதி ஒதுக்கீடு.
* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.50 கோடி.
* இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ.108.46 கோடி நிதி ஒதுக்கீடு.
* வணிகவரி வசூல் ரூ.72,068 கோடி இலக்கு.
* எல்.இ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைப்பு.
* செல்போன் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5% இருந்து 5% ஆக குறைப்பு.
* 10 குதிரைத் திறன் மோட்டார் பம்பு, பாகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.
* மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப்பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்.
* உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.
* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வரி விலகு.
இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment